நீட் விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம்:மு.க.ஸ்டாலின்
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு போராட்டம் நடத்தி கைதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணனை திமுக செயல் தலைவர் சந்தித்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ராமக்கிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அதிமுக அணிகள் இரண்டும் சர்க்கஸ் கூடாரம். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக தமிழக அரசு கூறுவது கபட நாடகம். இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களை பற்றி மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கடிதம்:
முன்னதாக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: நீட் தேர்வில் தமிழக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. நீட் எனும் கொடுங்கரத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும். கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் முன்னிலையில், நீட் விவகாரம் குறித்து முதல்வர் பேசியிருக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு கேட்டு நடந்த மனித சங்கிலி போராட்டத்தை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.