ஐரோப்பாவில் மீண்டும் தொடங்கும் வர்க்கப்போர்!

Default Image
“ஜெர்மன் அரசு இடதுசாரிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெர்மன் வலதுசாரிக் கட்சிகள் அரசை குற்றம் சாட்டுகின்றன. அண்மையில் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
“வலதுசாரி தீவிரவாதத்தை (நவ – நாஜிகள்) கண்காணிப்பதற்கு அரசு வருடாந்தம் 24 மில்லியன் யூரோக்கள் ஒதுக்குவதாகவும், இடதுசாரித் தீவிரவாதத்தை கண்காணிக்க ஒரு யூரோ கூட செலவிடப் படவில்லை” என்று இனவாதக் கட்சியான AfD பிரச்சாரம் செய்து வருகின்றது.
கடந்த இரு தசாப்த காலமாக, அரசு இடதுசாரி தீவிரவாதிகள் மீது மென்மையாக நடந்து கொள்வதாகவும் வலதுசாரிக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தீவிர இடதுசாரிகளின் வன்முறைகளை, (மிதவாத) இடதுசாரிக் கட்சிகள் கண்டிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கின்றன.
ஹம்பூர்க் நகர கலவரத்தில் பங்கெடுத்த இடதுசாரி தீவிரவாதிகள் பலர் பிற ஐரோப்பிய நாட்களில் இருந்து வந்துள்ளனர். ஆகவே, இது ஜெர்மனியின் பிரச்சினை மட்டுமல்ல, ஐரோப்பியப் பிரச்சினை. இதுவரையில் ஐம்பது பேரளவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். ஒருவர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப் பட்டுள்ளது.
சர்வதேச மகாநாடுகள் நடக்கும் இடங்களில் கலவரத்தில் ஈடுபடுவோர் “கருஞ்சட்டைக்காரர்கள்” என்று அழைக்கப் படுகின்றனர். Black Block என்ற இரகசிய அமைப்பை சேர்ந்த அனார்க்கிஸ்டுகள். அவர்கள் ஒரு வர்க்கப்புரட்சியை அல்லது உள்நாட்டுப் போரை எதிர்பார்த்து, தம்மைத் தாமே தயார்படுத்திக் கொள்கின்றனர்.
ஹம்பூர்க் கலவரத்தின் போது நடந்ததைப் போன்று, தெருக்களில் தடையரண் போடுவதற்கும், பொலிஸ் படைகளுடன் மோதுவதற்கும் பயிற்சி எடுத்தவர்கள். மிக இரகசியமாக இயங்கும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சில ஆயிரக் கணக்கில் இருக்கலாம். Black Block அமைப்பை ஒரு பயங்கரவாத இயக்கமாக
அறிவிப்பதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்