டிரம்ப் எச்சரிக்கை:அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும்..!
கில்ஜூ கவுண்டியில் நடத்தப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை ஆகும். இது கடந்த ஆண்டு நடத்திய சோதனையை விட அதிக ஆற்றல் வாய்ந்தது. இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை உலக அரங்கை அதிர வைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.இந்த நிலையில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அது வடகொரியாவுக்கான சோக நாளாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.