மூத்த பத்திரிகையாளர் கொலையில் மகிழ்ந்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய மந்திரி!!
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.இந் நிலையில் டுவிட்டரில் ஒரு தரப்பு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தது.
பத்திரிக்கையாளர் கொலையில் மகிழ்ச்சி தெரிவித்து டுவிட் செய்தவர்களுக்கு எதிராகவும் டுவிட்டரில் தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்த மோதல்களுக்கு இடையே மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில், “ஒருவர் கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சியை தெரிவிப்பது என்பது மிகவும் அவமானத்திற்குரியது, முற்றிலும் வருந்தத்தக்கது மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. சமூக வலைதளங்கள் அதற்கானது கிடையாது.” என்றார். கொலைக்கு மகிழ்ச்சி தெரிவித்து செய்திகள் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.