பிரிட்டன் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் விருது..!
இலக்கியத்துக்கான நோபல் பரிசை லண்டனைச் சேர்ந்த கஸோ இஷிகுரோ வென்றுள்ளார். ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய கஸோ இஷிகுரோ (62), ஆங்கிலத்தில் பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ள கஸோ, அண்மையில் நாவலில், விஞ்ஞான புனை கதை பாணியை அறிமுகப்படுத்தி இருந்தார். ஆங்கிலம் மட்டுமன்றி பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழியிலும் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன.