செல்பி புகைப்படங்களை அழகாக்க உதவும் சிறந்த செயலிகள்!!
கேமிரா இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தரமான கேமிராவுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக அனைத்து நிறுவனங்களும் செல்பி கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
சிறந்த செயலிகள்:
ஸ்வீட் செல்பி (Sweet Selfie):
உங்கள் கேமராவில் ஒரு ஃபெர்பெக்ட் செல்பியை எடுத்துவிட்டால், அதன் பின்னர் அந்த புகைப்படத்தை மேலும் மெருகூட்டவும், ஒருசில செல்பி பில்டர்களையும் கொண்டது தான் இந்த ஸ்வீட் செல்பி செயலி.
மேலும் உங்கள் செல்பி புகைப்படங்களில் எமோஜிக்களை இணைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி வெளிச்சம் குறைவான இடத்தில் தெளிவான செல்பி எடுக்க சூப்பர் பவர் ஃபிளாஷ் இந்த செயலியில் உண்டு.
கேண்டி கேமிரா (Candy camera):
இந்த செயலி செல்பி புகைப்படங்களை பில்டர் செய்யவும், அழகிய வடிவில் டிசைன் செய்யவும் உதவுகிறது. மேலும் இந்த செயலி நீங்கள் போட்டோ எடுக்கும்போதே ரியல் டைமில் பில்டர்களை காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எடிட்டிங் வசதி, ஸ்லிம்மின் வசதி, வொயிட்னிங் வசதி ஆகியவைகளுடன் லிப்ஸ்டிக், ஐ லைனர் போன்றவற்றை புகைப்படத்தில் இணைக்கவும் இந்த செயலி உதவுகிறது.
யூகேம் பெர்ஃபெக்ட் (YouCam Perfect):
இந்த செயலியை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தால் புகைப்படங்களில் உங்கள் போட்டோவின் கலரை மாற்றிவிடலாம். கருப்பாக இருப்பவரை வெள்ளையாக மாற்றும் பவர் இந்த செயலிக்கு உண்டு. மேலும் முக சுருக்கங்கள், தழும்புகள் ஆகியவற்றை நீக்கவும் இந்த செயலி உதவும்.
அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட படத்தொகுப்பு அம்சங்கள், பிரேம்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் வேடிக்கையாக மாற்றும் விஷயங்களும் இதில் உண்டு. செல்பி வீடியோக்களுக்கும் இந்த செயலி எடிட் செய்ய உதவுகிறது.
பியூட்டி பிளஸ் (Beauty Plus):
சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் இந்த செயலியில் கறைகள் நீக்கவும், மென்மையாக தோலாக மாற்றம், கண்களை கவர்ச்சியாக மாற்றவும், பற்களை தூய வெண்மையாக மாற்றவும், கண் கலரை மாற்றவும் செய்யலாம். ஏராளமான பில்டர்கள், ஸ்பெஷல் எபெக்ட்களிஅ கொண்ட இந்த செயலி நிச்சயம் செல்பி பிரியர்களுக்கு உபயோகமானதே.
மேலும் புகைப்பட தொழில் புரிபவர்களுக்கு உதவும் வகையில் கூடிய அதிநவீன போட்டோ எடிட்டிங் டூல்ஸ்கள் இதில் உள்ளன. மேலும் இந்த செயலியில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை இதிலிருந்தே சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட் ஆகியவற்றுக்கு அனுப்பலாம்