மோசடி ஏஜெண்டுகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; பொன் குமார் வலியுறுத்தல்

Default Image

பெரம்பலுார்: மோசடியில் ஈடுபடும் ஏஜெண்டுகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பொன் குமார் கூறினார். பெரம்பலுாரில், தமிழக விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பொன் குமார் நிருபர்களுக்கு அளி்தத பேட்டி: வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கொடுமைப்படுத்தப்படுகின்றனர். விசாவில் குறிப்பிட்டுள்ளபடி வேலை வழங்குவதில்லை. மாற்று வேலை செய்ய வற்புறுத்தல் செய்யப்படுகின்றனர். வேலைப்பழு அதிகம், சம்பளம் குறைவு, கொத்தடிமைகளாக பலர் பணியாற்றி வருகின்றனர்.ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். வொளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்களின் நலனை காத்திட மத்திய, மாநில அரசு கள் நடவடிக்கை தேவை. வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டிற்கு 70 ஆயிரம் கேடி பில்லியன் டாலர் வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011 வரை செயல்பட்ட, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு சென்று நாடு திரும்பி வாழ்வை இழந்து நிற்போரின் வாழ்வை மறுசீரமைப்பு செய்திட , அவர்கள் தொழில் தொடங்கிட வங்கிகள் மூலம் கடன் உதவி, கிடைத்திடவும் நடவடிக்கை தேவை.தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பிபடி சிவகங்கை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் பாஸ்போர்ட் எடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை செய்வோர் வாக்களித்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதை நடைமுறைப்படுத்துவதற்காக நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.புலம்பெயருவோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்தவர்களை ஒருங்கிணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டிசப்பர் 8ம் தேதியை புலம்பெயர்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை பெரம்பலுார் மாபெரும் விழாவாக கொண்டாட உள்ளோம்.

இதுவரை புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து காயமடைந்தோர், உயிரிழந்தோர் என 400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வறுமை, வெளிநாட்டு மோகம், பொருளாதார தேவைக்காக குடும்பத்தினர் ஏற்படுத்தும் நெருக்கடியினால் பலர் வெளிநாடு செல்ல வேண்டியசூழலுக்கு தள்ளப்படுகின்றனர். மத்திய அரசின் 1982 இமிக்கிரேசன் சட்டத்தில் உள்ள சில சரத்துக்களில் திருத்தம் செய்ய வேண்டும். மோசடியாக செயல்பட்ட நுாற்றுக்கணக்கான ஏஜென்டுகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடவடிக்கை இல்லை. ஏமாற்றும் ஏஜென்ட்டுகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்