பாலியலால் துன்பங்களை சுமக்கும் பெண்கள் நிலை குறித்து வேதனை ..அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கவலை !
இவர் தான் நோபல் அமைதிப்பரிசை வென்றவர் .
நோபல் அமைதிப்பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 11,000-கிமீ தூரம், 22 மாநிலங்களைக் கடந்து பாரத் யாத்ரா மேற்கொண்டு டெல்லி திரும்பியுள்ளார்.
ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த யாத்திரை மூலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் களங்கங்களையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது, நாட்டில் பெரும்பாலும் பலாத்காரத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் களங்கத்தைச் சுமந்து துன்புற்று வருகின்றனர் என்றார்.
22 மாநிலங்களில் பயணம் மேற்கொண்ட பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தீர்கள். அவருடன் விவாதித்த முக்கிய பிரச்சினைகள் என்னெவென்றால்
இத்தனையாண்டு கால என் பயணத்தில் நான் சென்ற இடங்களில் நான் அனுபவம் பெற்றதென்னவெனில் குடும்பம், கவுரவம், மரியாதை என்ற பெயரில் நாம் குழந்தைகளுக்கு என்ன புகட்டினோமோ அதனால் அவர்கள் பெரிதும் துன்புறுகின்றனர் என்பதே. அவர்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு வழி இல்லை.
இதனால், குடியரசுத்தலைவரிடம், தேசிய குழந்தைகள் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதன் மூலம் காலத்தில் வழக்குகளுக்கு தீர்ப்பு கிடைக்கும். மூத்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பாயத்தில் அங்கமாக இருக்க வேண்டும்.
பெரும்பாலான மாநிலங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்முறை வழக்குகள் 90-95% நிலுவையிலேயே உள்ளன. குழந்தைகளிடம் நட்பு பாராட்டும் காவல் நிலையங்கள் தேவை, அங்கு இத்தகைய வழக்குகளை நாசுக்காக கையாளுவதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
பாரத் யாத்ராவின் போது என்னுடைய அனுபவம்மானது
குழந்தைகள் தாங்கள் வளர வேண்டும் என்று பேரார்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள், ஆனால் சமூகத்தடைகள் அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. குறிப்பாக பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை பேச விடாமல் தடுக்கின்றனர், குடும்ப கவுரவம், களங்கம் ஆகியவற்றுக்கு அஞ்சி புகார் அளிக்க மறுக்கின்றனர். யாத்திரையின் போது நிறைய குழந்தைகள் என்னை நோக்கி ஆர்வமாகத் தழுவிக்கொள்ளவும், கைகொடுக்கவும் வந்தனர். காரணம் நான் அவர்கள் எதிர்கொண்ட துன்ப அனுபவங்களை பேசுவதற்கு மேடை அமைத்துக் கொடுத்தேன் என்பதுதான்.
சமூகத்தின் நோய்க்கூறான மனநிலை ஏற்படுத்தியுள்ள தடைகளையும், களங்கங்களையும் உடைத்தெறிய குழந்தைகளும் இளைஞர்களும் முன் வர வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தக் களங்கம் என்ற நோய்தான் பலிகடாவாக்கப்படுவதற்குக் காரணமாகிறது, பலிகடாக்களை அதிகமாக்குவதும் இந்தக் களங்கம்தான். குறிப்பாக பெண்கள் தங்களை பலவீனமானவர்களாக உணர வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
சமூகத்தில் பெரிய அளவில் உணர்ச்சியின்மை, உணர்ச்சி மழுக்கம் ஏற்பட்டுள்ளது .இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அச்சம் ஏற்படுகிறது. யாராவது ஒருவர் இதனை எதிர்க்க வேண்டும். மாற்றம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள், போலீஸ், நீதித்துறை இதன் ஓசையைக் கேட்டு விழித்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார விவகாரம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறதா என்ற மக்களின் பிரச்சினைகளை அரசிடம் எடுத்துக் கொண்டு சென்றுள்ளோம். மேலும் மதத்தலைவர்களையும் இதே மேடையில் ஈடுபடுத்தியுள்ளோம், இதனால் பலாத்காரம் துன்புறுத்தல் ஆகியவற்றை பிரதானப்படுத்திப் பேச முடிகிறது.
பாலியல் பலாத்கார விவகாரத்தில் எந்த வித சகிப்புக்கும் இடமில்லை என்று சுமார் 40 லட்சம் மக்கள் உறுதி அளித்துள்ளனர். பல மாநிலங்களில் முதல்வர்களே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஆதரவுக்குரல் கொடுத்தனர். காஷ்மீர், பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டங்கள் இயற்றப்படும் என்று உறுதியளித்தனர்.
பாலியல் தொல்லையால் இருக்கும் அவலை பெறும் வேதனையை கிளப்பியுள்ளது.