“அண்ணன் தம்பி சண்டையில் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்” – ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சகோதரர்களுக்குள்ளே நடக்கும் சச்சரவில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாயம் தேட முயல்வதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயில் அருகே நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணன் தம்பிக்குள் நடக்கும் சச்சரவில் மு.க.ஸ்டாலின் ஆதாயம் தேட முயல்வதாக கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்த ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்பதை முதலமைச்சராக துடிக்கும் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஆட்சிக்கு யார் எதிராக சதி செய்தாலும் அவர்கள் தமிழக வரலாற்றில் எட்டப்பராக சித்தரிக்கப்படுவார்கள் என்றும் தழிகத்தில் 2021 ஆம் ஆண்டில்தான் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.