மழைநீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் தாமதம்,,!
சென்னை; நேற்று மாலையிலிருந்து பெய்து வரும் தொடர் கனமழையால் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய ரயில்கள் வந்து சேர்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் பேருந்து சேவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.