மெர்சல் படத்துக்கு ஆப்பு வைத்த ஆளும்கட்சி எம்.எல் .ஏ …!
சமீபத்தில் நடிகர் விஜயின் மெர்சல் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை படு மெர்சலாக்கியது, இதனை ரசிகர்களும் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்தனர். ஆனால் அந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக அமைந்தது சென்னை உயர் நீதிமன்றம் மெர்சலுக்கு தடை விதித்தது.
இதற்கு கரணம் “மெர்சலாயிட்டேன்” என்ற படத் தலைப்பு தான்.இந்த படத்தின் தயாரிப்பாளர் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியீட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.அந்த நிறுவனமானது நடிகரும் மற்றும் எம்.எல்.ஏ-ம் ஆன கருணாஸின் சொந்த நிறுவனமான ‘கென் மீடியா கருணாஸ் பிரசன்ஸ்’ என்ற நிறுவனமாகும் .
இதனால் இந்த வழக்கின் பின்னணியில் இவருக்கும் பங்கு இருக்குமோ என்ற ரசிகர்கள் மத்தியில் பலமாகவே சந்தேகம் எழுந்துள்ளது.