தோல்வியின் விழும்பில் இலங்கை…!

Default Image

கொழும்பு: ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில், 388 ரன் வெற்றி இலக்கை துரத்தும் இலங்கை அணி 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்துள்ளது. கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் அதிகபட்சமாக 160 ரன் விளாசினார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 10 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்திருந்தது. சிக்கந்தர் 97, மால்கம் வாலர் 57 ரன்னுடன் ேநற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். வாலர் 68, சிக்கந்தர் 127 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். 

கேப்டன் கிரீமர் 48, திரிபானோ 19 ரன் எடுத்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 377 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இலங்கை பந்துவீச்சில் ஹெராத் 6, தில்ருவன் 3, லாகிரு குமாரா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்துள்ளது. கருணரத்னே 49, தரங்கா 27, கேப்டன் சண்டிமால் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். குசால் மெண்டிஸ் 60, ஏஞ்சலோ மேத்யூஸ் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இலங்கை அணி வெற்றிக்கு இன்னும் 218 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence