டிரம்ப் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம்!!
மெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த, எம்.பி.,யான, பிராட் ஷெர்மேன், அதிபர் டிரம்பிற்கு எதிராக, பார்லிமென்ட்டில் கண்டன தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். அதிபராக பதவியேற்ற பின், டிரம்ப் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் கண்டன தீர்மானம் இது. ‘அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது பற்றி, முறையாக விசாரணை நடத்த விடாமல், டிரம்ப் தடுக்கிறார்’ என, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்லிமென்டில், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், இந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை. கண்டன தீர்மானம் குறித்து, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘டிரம்ப் மீது ஜனநாயக கட்சி எம்.பி., கொண்டு வந்துள்ள கண்டன தீர்மானம், அரசியல் முதிர்ச்சியின்மையைதான் காட்டுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, டிரம்பின் மகன், ஜான் டிரம்ப், அனைத்து விபரங்களையும் வெளிப்படையாக தெரிவித்த பின், இதை பற்றி பேச தேவையில்லை’ என்றார். ஜனநாயக கட்சி எம்.பி., ஷெர்மேன் கூறுகையில், ”அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், செயல்பாடுகளை பார்த்து, அமெரிக்கா மட்டுமின்றி, உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.