இது தற்கொலையல்ல; திட்டமிட்ட கொலை! அனிதாவின் வழக்கறிஞர் ஆவேசம்
அரியலூர்,
மாணவி அனிதா மருத்துவராகும் வாய்ப்பைப் பறித்த ‘நீட்’ தேர்வு, தற்போது அவரின் உயிரையும் பறித்து விட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதா சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் சுரேஷ் பாபு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அனிதா மரணம் தற்கொலையல்ல; ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய திட்டமிட்ட கொலை என்று ஆவேசப்பட்டுள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நான் கடைசியாக அனிதாவை வழக்கின்போதுதான் பார்த்தேன்; அப்போது அவர் பேசுகையில், ‘எங்க பகுதி மக்களுக்கு நான் மருத்துவராகி சேவை செய்யணும்; எப்படியாவது ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைத்துவிட வேண்டும்’ என்றார்; தற்போது அவரின் மரணம் ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது; அனிதாவின் தற்கொலை அரசுகள் செய்த திட்டமிட்ட கொலை; இதற்கு அரசுகள்தான் பொறுப்பு; முதலில் ஒரு கருத்து, வழக்கு நடக்கையில் ஒரு அக்கருத்து என, ஏன் மத்திய அரசுக்கு மனமாற்றம் வந்தது என்று தெரியவில்லை.” இவ்வாறு சுரேஷ் பாபு கூறியுள்ளார்.
எனக்காக இல்லைன்னாலும்…
நான் டென்த் டுவெல்த்ல நிறைய மார்க் எடுத்தேன்… எங்க அப்பா திருச்சியில மூட்டை தூக்கிதான் எங்களை படிக்க வெச்சாரு… நீட் எக்ஸாமால் பாதிப்பு நாங்க ரொம்ப கஷ்டபடுற பேமிலிதான்…எனக்கு எம்பிபிஎஸ் படிக்கனும்கிறது கனவு. ஆனா நீட் எக்ஸாம் வந்ததால எங்களால படிக்க முடியலை.. நீட் எக்ஸாமில் செலக் ஆக முடியலைமற்றவர்களுக்காக… எனக்காக இல்லைன்னாலும் என்னை மாதிரி கஷ்டப்பட்டுபடிக்கிற பேமிலி இருக்காங்க.. அவங்களுக்காச்சும் இனிமேலாச்சும் நீட் எக்ஸாமை தடை செய்யனும்னு தமிழக அரசை கேட்டுக்கிறேன்.
மாணவி அனிதா கடைசியாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி