நாகரிகத்தின் உச்சம் தொட்ட அமெரிக்காவில் அதிகரிக்கிறது குழந்தை திருமணங்கள்….!
நாம் இன்றைக்கும் நாகரிக முன்னேற்றம் என்பது அயல்நாட்டு நாகரிகம் தான் என மேச்சிகொள்வோம். ஆனால் அதன் உண்மை நிலைக்கு மாறான நிலையினை நோக்கிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு நமது கண் முன் உள்ள உதாரணம் தான் “அமெரிக்கா” என்னும் மிகப்பெரிய நாடு…
சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் நாகரிகத்தின் உச்சம் தொட்டதாக கூறப்படும் அமெரிக்காவில் அதிகரிக்கிறதாம் குழந்தை திருமணங்கள்.
அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-மாகாணங்களில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது எது என்று குறித்த சட்டங்களே இல்லை. அதன் விளைவாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு திருமணங்கள் நடப்பதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது.