வந்தே மாதரம் தெரியாத பா.ஜ.க. பிரமுகர் !தொலைகாட்சி விவாதத்தில் சிரிப்பு !
வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியர் அனைவருக்குமே ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும்.இந்நிலையில் நேற்று மாலை “ஜீ ஸலாம்” எனும் உருது சேனலில் பள்ளிக்கூடங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவதைக் கட்டாயமாக்குதல் சரியா என்பதைக் குறித்து விவாதம் காரசாரமாக நடந்தது. வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயமாக்குதல் அவசியம் என்று வாதிட்டார் பா.ஜ.க. தலைவர் நவீன்குமார் சிங். வாதத்தில் பங்கேற்ற இஸ்லாமிய பிரமுகர் முப்தி அர்ஷத் காஸ்மிஅந்த பாடலை ஒரு முறை பாடிக்காட்டுமாறு நவீன் குமார் சிங்குக்கு சவால் விட்டார். அவரும் ஆர்வம் மேலிட்டு பாடத் துவங்கினார் ஆனால் அவருக்கு முதல் வரியைத் தவிர அடுத்த வரிகளை பாடத் தெரியவில்லை.தப்பும் தவறுமாக உளறிக் கொட்டினார். விவாதத்தில் பங்கு கொண்டவர்களும் தொலைகாட்சி பார்வையாளர்களும் சிரித்தனர்.இது மிகவும் பெரிய சர்ச்சையாக மாறிஉள்ளது .