அடுத்தாக இந்தியாவுடன் இலங்கை மோத அட்டவணை தயார்…!
இந்தியா – இலங்கை மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 16-ல் தொடங்குகிறது.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16-ல் தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நவம்பர் 16-லும், இரண்டாவது டெஸ்ட் நாகபுரியில் நவம்பர் 24-லும், மூன்றாவது டெஸ்ட் டெல்லியில் டிசம்பர் 2-லும் தொடங்குகின்றன.
அதனைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் டிசம்பர் 10-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது ஆட்டம் டிசம்பர் 13-ல் மொஹாலியிலும், மூன்றாவது ஆட்டம் டிசம்பர் 17-ல் விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து மூன்று டி20 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அவை கட்டக்கில் டிசம்பர் 20, இந்தூரில் டிசம்பர் 22, மும்பையில் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.