உலக நாடுகளை அதிர வைக்கும் நாடு !அணு குண்டு சோதனையில் உயிரிழப்புகள் நடந்ததாக குற்றச்சாட்டு ..
இன்று உலக நாடுகள் அனைத்துமே பயப்படும் ஒரே ஒரு நாடு தான்.அது தான் வடகொரியா .தனது உருவத்தில் வேணும் என்றால் சிறிதாக இருந்தாலும் பல வல்லரசு நாடுகளையே நடுங்க வைக்கிறது .காரணம் அது வைத்திருக்கும் அணு ஆயுதங்கள். வடகொரியாவில் அணுஆயுத சோதனை நடைபெற்ற கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் பலியானதாக ஜப்பான் நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி ஆறாவது முறையாக மிகப்பெரிய நிலத்தடி அணுகுண்டு சோதனையை அந்நாடு நடத்தியது. இந்த சோதனை நடந்து முடிந்த சில நாட்களில் அணுசோதனை நடைபெற்ற புங்கியாரி என்ற இடத்தில் உள்ள சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 100 தொழிலாளர்கள் பலியாகினர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் நிறுவனமான அசாஹி, செப்டம்பர் 3-ம் தேதி, வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகொண்ட இரு அணுகுண்டுகளைச் சோதனை செய்துள்ளதாக கூறியுள்ளது. அவை ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. மேலும் 120 கிலோ டன் எடைகொண்டது.
இதனால் புங்கியாரி மலைப் பகுதியில் அணுகுண்டுச் சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் 100 பேர் பலியான நிலையில், அதனை தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளின் போது மீண்டும் ஒருமுறை சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேலும் 100 பேர் என மொத்தம் 200 பேர் பலியாகியுள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனமான அசாஹி தெரிவித்துள்ளது. தரைக்கு அடியில் நடத்தப்படும் அணுகுண்டுச் சோதனைகள், மலைப் பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என வடகொரிய அதிபர் கிம்மை அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி அவர் அணுகுண்டுச் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளார். இதன் காரணமாக தற்போது அப்பகுதியில் கதிர்வீச்சு வெளியாகியுள்ளதாக என்று ஜப்பான் நிறுவனம் கூறியுள்ளது.இந்நிலையில் இது கூறித்து வட கொரியா எந்த விதமான கருத்துகளையும் கூறவில்லை .