அரசியல் லாபத்திற்காக இரட்டை வேடம் போடுகிறாரா..? கமல்ஹாசன்
கமலஹாசன் ட்வீட்டர் அரசியலை துவக்கியதே பா.ஜ.க. அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவை கடுமையாக விமரிசித்துதான். “நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது” என்றார். “வேத காலத்தில் பிராமணர்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள்” என்று கூறினார். அதன் பிறகுதான் தமிழக அரசின் ஊழலை விமரிசித்து வரிசையாக பதிவுகள் போட்டார். இப்போது முதலமைச்சர் ஆகலாம் என்று முடிவு எடுத்தபின்னர் “மத்திய அரசோடு சுமுகமான உறவு வைத்திருந்தால்தானே போதிய நிதி உதவி பெறமுடியும்?” என்று எடப்பாடி பழனி சாமி லெவலுக்கு பேசுகிறார்.சாயத்தை அவரேதான் மாற்றிக் கொண்டிருக்கிறார்.