மல்லிகைப் பூவில் இப்படி ஒரு மருத்துவகுணங்களா…!
மருத்துவகுணம் கொண்டது மல்லிகைப் பூ. உங்கள் வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உடலுக்கு பிரச்சனைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம். இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் சரியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூவை ஒன்றிரண்டை உண்டுவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த மருந்தாக உள்ளது.
மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் ஏற்பட்டலோ, மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் இந்த எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்குவதோடு உடல், குளிர்ச்சி அடையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் குறையும்,,.