வரலாற்றில் இன்று அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபட்டுள்ளது…!
வரலாற்றில் இன்று – அக்டோபர் 17 ஆம் தேதி 1979 ஆண்டுதான் – அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.இவர் அல்பானியாவில் பிறந்து இந்தியாவில் தனது கிறிஸ்துவ மத தொண்டினை கொல்கத்தா நகரில் ஆற்றினர்.அவருக்கு அமைதியின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அன்னை தெரேசா தனது நோபல் நன்றியுரையில். “உலகம் முழுவதும், ஏழை நாடுகளில் மட்டுமல்ல மேற்க்கத்திய நாடுகளிலும் கூட, ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது” என்றுரைத்தார். “தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்.” என்றார்..