கோதுமை லச்சா பரோட்டா
என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கோதுமை, உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து, ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பலகையில் எண்ணெய் தடவி திரட்டவும். அதன் மீது எண்ணெய் தடவி சிறிது கோதுமை மாவை தூவி, இரு பக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல் மடித்து வட்டமாக சுருட்டவும். இதை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சற்று கனமான பராத்தாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.