ஓவியாதான் என் வீட்டு மருமகள் அடித்து கூறும் ஆரவ் அம்மா….!
சென்னை: ஓவியா தான் என் மருமகள் என்று ஆரவின் அம்மா கூறியது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆரவ் முதலில் ஓவியாவுடன் நெருங்கிப் பழகிவிட்டு பின்னர் அவரை பிடிக்கவில்லை என்றார்.
ஆரவின் நடவடிக்கையால் ஓவியா மனமுடைந்தார்.
ஆரவ்
ஆரவ் சம்மதித்தால் ஓவியா தான் என் மருமகள் என்று அவரின் அம்மா கூறியதாக செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் இதே பேச்சாக கிடந்தது.
உண்மை
எனக்கு மருமகள் என்றால் அது ஓவியா தான் என்று ஆரவின் அம்மா கூறவே இல்லையாம். இது எல்லாம் வெறும் வதந்தி என்று ஆரவின் சகோதரர் பிரபல பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
காதல்
ஆரவ் கண்டுகொள்ளாவிட்டாலும் ஓவியா இன்னும் அவர் நினைப்பில் தான் உள்ளார். இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்து வருகிறார் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ்
ஓவியா வெளியே வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி வெகுவாக குறைந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் ஓவியாவை அழைத்து வர ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.