பஞ்சாப் அங்கன்வாடி ஊழியர்கள் மீது போலீஸ் தாக்குதல்;
அங்கன்வாடி ஊழியர்களின் அகில இந்திய சம்மேளனத்தின் தலைவர் உஷாராணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் போராடும் ஊழியர்கள் மீது பஞ்சாப் போலீஸ் நேற்று நள்ளிரவில் கொடூரமான் தாக்குதலை நடத்தி உள்ளது.
அங்கன்வாடி திட்டத்தை சீரழிக்க கூடாது என்பதே கோரிக்கை.. அதாவது நர்சரிகளை அரசே துவக்கிவிடுவது;குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கொடுப்பதற்கு பதிலாக நேரடியாக பணத்தை பயனாளிகளுக்கு கொடுப்பது-போன்ற முறையில் அங்கன்வாடி திட்டத்தை சீரழிக்க மோடியின் சதிதிட்டத்தை அப்படியே அமுல்படுத்த பஞ்சாப் காங்கிரஸ் அரசு துடிக்கிறது.
இதை எதிர்த்து தான் அங்கன்வாடி சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. முதலமைச்சர் வீட்டைசுற்றி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை என்பதினால். பஞ்சாப் முதல்வர் இல்லம் உள்ள பட்டியாலாவில் இரவு அங்கேயே நடுரோட்டில் படுத்து தூங்கி விட்டனர். இதனால் நேற்று நள்ளிரவு போலீஸ் அங்கு தாக்குதல் நடத்தினர், தோழர். உஷாராணி உள்ளிட்டு பலர் படுகாயம் அடைந்தனர்.