சியோமி எச்சரிக்கை!:ரெட்மீ போன் அழுத்தினால் வெடிச்சுரும்!!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சியோமி ரெட்மீ நோட் 4 மொபைல் வாங்கிய சில நாட்களிலேயே வெடித்துச்சிதறியது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தபோது வெடித்ததால் அவரது தொடை கருகியது.
இதையடுத்து, சியோமி நிறுவனம் அந்த இளைஞரை தொடர்புகொண்டு வெடித்த மொபைலை பெற்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர், வெளியிலிருந்து மொபைலுக்கு அதிகப்படியாட அழுத்தம் தரப்பட்டதால் மொபைல் வெடித்திருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அதிகப்படியான அழுத்தம் காரணமாக பேட்டரி உள்ளேயே வளைந்து திரையும் சேதமடைந்துள்ளது என்று அந்நிறுனவம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து அந்நிறுவனம் மொபைல் வெடித்ததற்கான காரணத்தை அறிய முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் மொபைலில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.