களைகட்டும் விநாயகர் சதுர்த்தி விழா சென்னையில் பலத்த பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், கடந்தாண்டு 2961 விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன. இந்த சிலைகள் ஒரு வாரம் காலம் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட பின்னர் கடலில் கரைக்கப்பட்டது. இந்தாண்டு அதிகளவில் சிலை வைக்க போலீசாரிடம் இந்து அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, மேலும் சில இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை உள்ள சிலை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மாதிரியான பெரிய சிலைகள் மட்டுமே போலீசார் கணக்கில் வைக்கின்றனர். அந்தவகையில் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைப்புக்காக மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு 4 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
விநாயகர் சிலை வைக்கப்பட உள்ள இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தீப்பிடிக்காத கூரையை அமைக்க வேண்டும். அனுமதியின்றி பொது இடங்களில் யாரும் சிலைகள் ைவக்க கூடாது. கரையாத சிலைகளை வைக்கக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகள் வைக்க கூடாது உள்ளிட்ட அறிவுரைகளும் பல்ேவறு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.