திபெத் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் சீனா
புதுடில்லி : திபெத்திய எல்லைப் பகுதியில் படைகளை குவித்தும், போர் ஒத்திகை நடத்தியும் வந்த சீன ராணுவம், தற்போது நுாற்றுக்கணக்கான டன் கணக்கில் போர் ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் குவித்து வருகிறது.சிக்கிம் எல்லையில் திபெத்தின் வடக்கு பகுதியில் ஷின்ஜியாங் நகருக்கு அருகே இந்த ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. டோக்லாம் பகுதியில் சாலை மற்றும் ரயில் பாதைகளை அமைத்து வந்த சீனாவை, இந்தியா தடுத்ததன் காரணமாக, எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் எல்லை சீன போர் ஆயுதுங்களை குவித்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் நடத்தப்பட்ட போர் ஒத்திகை, ஆயுத குவிப்பு குறித்து பதிலளிக்க சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான பிஎல்ஏ டெய்லி மறுத்துள்ளது. அதே சமயம் ஷங்காயை சேர்ந்த ராணுவ கமான்டரான நி லிசியாங் கூறுகையில், இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.