வரலாற்றில் இன்று சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது….!
வரலாற்றில் இன்று – அக்டோபர் 15 – 1990: அமேரிக்கா- சோவியத் யூனியன் இடையிலான பனிப்போரின் பதற்றத்தை குறைப்பதற்காக சோவியத் யூனியின் இரும்புத் திரை விலகவும் பங்காற்றியதற்காக சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அரசியல்-பொருளாதார நிர்வாகத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுக்கங்களைத் தளர்த்திய கொர்ப்பச்சேவ் பெரஸ்த்ராய்கா (மறுகட்டமைப்பு) என்ற பெயரில் சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவந்தார். கிளாஸ்நாஸ்ட் என்ற பெயரில் வெளிப் படைத் தன்மையை 1985ல் அறிமுகப்படுத்தினார். சோவியத் யூனியனின் உறுப்பு நாடுகள் போலந்து,பின்லாந்தும் அதனின்றும் விலகி சுதந்திர நாடுகளாவதற்கும் இவர் சம்மதம் தெரிவித்தார்.