யஷ்வந்த் சின்ஹாவின் விமரிசனங்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி சத்ருகன் சின்ஹா மற்றும் கூட்டணிக் கட்சி சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே..!
நரேந்திர மோடி ஆட்சியின் படு மோசமான பொருளாதாரக் கொள்கைகளை போட்டுடைத்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் விமரிசனங்களை சமாளிக்க நரேந்திர மோடி சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவை விட்டு பதில் கொடுக்க வைத்துள்ளார். ஆனால் தற்போது பா.ஜ.க. எம்.பி சத்ருகன் சின்ஹா மற்றும் கூட்டணிக் கட்சி சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே இருவரும் யஷ்வந்த் சின்ஹாவின் விமரிசனங்களை ஆதரித்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் பா.ஜ.க. ஆட்சியின் பொருளாதார தோல்விகளைக் கடுமையாக விமரிசித்துள்ளனர். இப்போது இந்த இரண்டு பேர்களையும் சமாளிக்க நரேந்திர மோடி என்ன செய்யப்போகிறார்?