கார் உற்பத்தியை நிறுத்த நிஸான் முடிவு செய்துள்ளது : ஜப்பான்
ஜப்பானில் கார் உற்பத்தியை இரு வாரங்களுக்கு நிறுத்த நிசான் முடிவு செய்துள்ளது. தரம் சார்ந்த முடிவுகள் மிக மோசமாக வந்திருப்பதால் இந்த முடிவை இந்நிறுவனம் எடுத்துள்ளது.
இச்செயல் மூலம் கார்களின் தரத்தை உயர்த்த முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது
சில கார்களை முழுமையாக சோதனை செய்யாமல் உள்நாட்டு டீலார்களுக்கு அனுப்பியதால் கார் உற்பத்தி தடையை நிருவனம் அறிவித்துள்ளது.
2௦14 ஜனவரி முதல் 2௦17 செப்டம்பர் வரை 11.6 லட்சம் கார்கள் விற்கப்பட்டுள்ளன இவை அனைத்தையும் இன்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் 25௦௦ கோடி யென் செலவு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் ஆண்டுக்கு 10.15 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 4 லட்சம் கார்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதம் 18-ம் தேதி ஜப்பான் அரசு தரக்குறைபாடு குறித்து தெரிவித்தது.