கேரளாவில் வசூலில் தெறிக்கவிட்ட மெர்சல் !ஆந்திரா,தெலுங்கனாவில் ஜொலிக்குமா…
தீபாவளிக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைபடம் மெர்சல். பல்வேறு தடைகளை தண்டி இந்த படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது .இந்த படம் கேரளாவில் முதல்நாளிலேயே ரூ. 6.1 கோடி வசூலித்த மெர்சல் தற்போது 18 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதனால், கேரளாவில் விஜய்யின் முந்தைய படமான ‘தெறி’ படத்தின் வசூலான 17 கோடி வசூல் சாதனையை மெர்சல் திரைப்படம் ஓவர்டேக் செய்துள்ளது. மேலும், கேரளாவில் விக்ரமின் ‘ஐ’ பட வசூலான 20 கோடி ரூபாய் வசூல் சாதனையை இன்னும் ஓரிரு தினங்களில் தாண்டிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
இதேபோல், கர்நாடாகாவிலும் மெர்சல் நல்ல வசூல் செய்து வருகிறது. தெறி படம் அங்கு 7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், மெர்சல் இரட்டை இலக்கத்தில் கோடிக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடகாவில் கபாலியின் வசூல் சாதனையை மெர்சல் முறியடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆந்திரா, தெலங்கானாவில் தெலுங்கு பதிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில், அங்கும் படம் வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அங்கும் வெளியாகி ஆதிக்கம் செலுத்துமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.