புளூவேல் விளையாட்டில் சிக்கிய நெல்லை மாணவர் மீட்பு
திருநெல்வேலி, –
நெல்லையிலும் ‘புளூவேல்’ விளையாட்டு விபரீதத்தை ஏற்படுத்தி வருவது மாணவர்கள், பெற்றோர் மத்தி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‘புளூவேல்’ எனப்படும் இணையதள விளையாட்டு உலக அளவில் குழந்தை களை அடிமையாக்கி நிலைகுலையச் செய்து வருகிறது. 50 நிலைகளாக விளையாடப்படும் இந்த விளையாட்டு 50ஆவதுநிலையில் தற்கொலை எண்ணத்தைத்தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை யடுத்து, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டசமூக வலைத்தளங்களில் ‘புளூவேல்’ விளையாட்டுக்கான தொடர்பு முகவரிகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தர விட்டது. ‘புளூவேல்’ விளையாட்டின் விபரீதம் குறித்து தமிழக போலீசாரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மொட்டை மலை கிராமத்தைசேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ‘புளூவேல்’ விளையாட்டின் கொடூரத்தால் தற்கொலை செய்து உயிரைமாய்த்தார்.
இதனால் தமிழகம் முழுவதும் ‘புளூவேல்’ விளையாட்டின் கொடூரம் குறித்து பலரும் அச்சப்படவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லையில் ஒரு மாணவர் ‘புளூவேல்’ விளையாட்டால் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளார்.நெல்லை மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த அந்த மாணவர் ஒரு பாலிடெக்னிக்கல்லூரியில் படித்து வருகிறார். அவர்‘புளூவேல்’ விளையாட்டை செல்போனில்டவுன்லோடு செய்து விளையாடி உள்ளார்.அதன் கட்டளைகளை ஏற்று அதற்கு அடிமையான அந்த மாணவர் தனது கைகளில் பிளேடால் ‘நீல திமிங்கலம்’ படம் வரைந்துள்ளார்.மேலும் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். உடனே அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு நெல்லையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.நெல்லையிலும் ‘புளூவேல்’ விளை யாட்டு விபரீதத்தை ஏற்படுத்தி வருவது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,“குழந்தைகள் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது, அதிகாலை, இரவுநேரங்களில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதை கண்காணிக்க வேண்டும். மேலும் குழந்தைகளை எந்நேரமும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்”என்றனர்.