குறைந்த வயதுடையோர்களை ஆட்டிபடைத்த ப்ளூவேலை விட மோசமானதுதான் இந்த “பிளாக்கா”..!
ஆல்பா பிவிபி என்ற வேதிப்பொருளின் கலவையில் உருவானது தான் இந்த பிளாக்கா….இது பார்ப்பதற்கு கட்டி உப்பு போன்று இருக்குமாம்.இதனை புகை பிடித்தல் மூலமாகவும்,கரைசலாக மாற்றி ஊசி மூலம் உடலினுள் செலுத்தியும் போதையை வரவழைத்து கொள்கின்றனர்
ஒருமுறை உட்கொண்டால்,அவர்கள் செய்யும் வேலை என்ன தெரியுமா?
நிர்வாணமாக ஓடுதல்
திடீரென வாகனங்களின் குறுக்கே சென்று விழுதல்
சக்திமான் போல் நினைத்து கொண்டு பறக்க முயற்சி செய்து இறப்பது
மாடியில் இருந்து குதிப்பது
மரங்களுடன் உறவு கொள்வது போல் ஆடையை களைந்து சில அறுவருக்க தக்க செயல்களில் ஈடுபட்டு மற்றவர்களையும் முகம் கோண வைப்பது ..
இது போன்ற எண்ணிலடங்கா செயல்களை செய்து உயிரை மாய்த்து கொள்வது தான் கடைசியில் நடக்கும்
இதுவரை அமெரிக்காவில் மட்டும் 20 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் பலர் கிட்டத்தட்ட 200 பேர் இதற்கு அடிமையாகி உள்ளதாகவும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் நம் மக்களுக்கு நல்லதை விட கெட்டது தானே மிக விரைவில் மனதில் உள்வாங்குவார்கள்…தற்போதைய நிலவரப்படி, இந்த பிளாக்கா பல நாடுகளில் உள்ளவர்களும் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது