ஆக்ஸ்போர்டு அகராதி:தமிழ் மொழியிலும் வந்தாச்சு!!!
இந்திய மொழிகளில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது ஆக்ஸ்போர்டு அகராதி உருவாக்கும் குழு.
100 மொழிகளில் ஆக்ஸ்போர்டு அகராதியை வெளியிடுவதை இலக்காகக் கொண்டு Oxford Global Languages (OGL) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய மொழிகளில் முதலாவதாக இந்தியில் ஆக்ஸ்போர்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இப்போது தமிழ் மற்றும் குஜராத்தி ஆகிய இரு மொழிகளில் ஆக்ஸ்போர்டு இணைய அகராதி வெளியாகியுள்ளது. https://ta.oxforddictionaries.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆக்ஸ்போர்டு தமிழ் அகராதியை பயன்படுத்தலாம்.