திருச்செந்துாரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் கொண்டாட்டம் !!!
திருச்செந்துார் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தோ் இழுத்து நேர்த்தி கடனைச்செலுத்தினர்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. காலை 6.20 மணிக்கு சிம்ம லக்கனத்தில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 6.40 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது, தொடர்ந்து காலை 6.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்கள் அரோகரா கோஷம் ஒலிக்க வலம் வந்து காலை 7.40 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.