மூன்று வருடத்திற்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் மாணவர்களுக்கு செக் வைத்த அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை :படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவை அறிவிக்க உள்ளது.
பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதாவது, 2011 ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தையும் பெறமுடியாது.
மேலும், கிரேட் சிஸ்டத்தில் 6.5 சதவிகிதம் எடுத்தால் முதல் வகுப்பு என முன்பு இருந்த நிலை இனி 7 சதவிகிதமாகவும், 8.5 சதவிகிதம் எடுத்தால் முதல் சிறப்பு வகுப்பு என்றும் மாற்றப்படவுள்ளது.