கடுமையாக விமர்சித்து தன்னை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி…!
கடுமையாக விமர்சித்து தன்னை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நன்றி என வெனிசுலா அதிபர் மதுரோ கூறியுள்ளார்.
ரஷ்யா, பெலாரஸ் மற்றும் துருக்கி நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட வெனிசுலா அதிபர் நேற்று தலைநகர் கராகஸ் திரும்பினார். இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னை உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்துவிட்டார் என்றும், ஒவ்வொரு முறையும் அவர் விமர்சிக்கும் போதெல்லாம், உலக மக்கள் தன் மீது மிகுந்த பாசத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார். அதிபர் மதுரோவின் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், இதனால் வெனிசுலா மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அதனை காரணம் காட்டி அங்கு ஆட்சியில் இருக்க கூடிய இடதுசாரி கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் கனவாகவே இருக்கிறது.