உங்கள் கணினியை மின்னல் வேகத்தில் இயங்க வைப்பது எப்படி?
உங்கள் கணினியின் பொறுமையான செயல்பாட்டிற்கான காரணத்தினைக் கண்டறிய டாஸ்க்மேனேஜர் மேக்புக் எனில் ஆக்ட்டிவிட்டி மேனேஜர் என்கிற பகுதிக்குள் சென்று உங்கள் கணினியின் விண்டோஸ் பதிப்பு, ரேம், ஸ்பேஸ் ஆகியவற்றினை சரிபாருங்கள்.அவற்றில் ஏதேனும் தவறு நேர்ந்திருப்பின் அல்லது நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்பினை பயன்படுத்திக்கொண்டிருந்தாலோ அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய விண்டோஸ் பதிப்பினை இன்ஸ்டால் செய்துகொள்வதன் மூலம் கணினி விரைவாக செயலுற துவங்கும்.
தனியான சில ஆப்ஸ்கள் மூலமாகவும் கணினியானது இவ்வாறு பொறுமையாக செயல்படும்.அதனால் எந்த ஆப் இதற்கான காரணம் எனக்கண்டறிந்து அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீளவும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப்பார்க்கலாம்.
கணினியின் துரிதமான மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு முக்கிய காரணமே கணினியின் ஹார்டு டிரைவ் பாகமாகும்.இதனால் கணினியில் சிஸ்டம்>ஸ்டோரேஜ் என்கிற பகுதியினை சரி பாருங்கள்.அதுவே மேக் ஆக இருப்பின் ஸ்டோரேஜ்>ஆப்பிள் மெனு என்கிற ஆப்ஷனில் சென்று சரிபார்க்கலாம்.அதிகப்படியான ஸ்டோரேஜ்யானது இருக்குமேயானால் அதனை வேறு மெமரி கருவிகளுக்கு ஷிப்ட் செய்துகொள்ளுங்கள்.அப்படியில்லையெனில் டிஸ்க் கிளீன்அப் என்கிற ஆப்ஷனில் சென்று க்ளீன் செய்வதன் மூலமும் கணினி விரைவாக செயல்படாத துவங்கும்.
உங்கள் கணினியின் மந்தச் செயல்பாட்டிற்க்கான காரணத்தினைக் கண்டறிய இயலவில்லையெனில்.வைரஸ்களைக் கண்டறியும் ஆன்டிவைரஸ் மென்பொருள் கொண்டு கணினியில் மால்வேர்ஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள்.
உங்கள் கணினியில் வைரஸ் உள்ளிட்டவற்றின் பாதிப்பு ஏதேனும் இருக்குமெனில் அதனைச் சரி செய்திட சிகிளீனர் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களைக்கொண்டு சரிசெய்யலாம்.
இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணினியை விரைவாகச் செயல்படுத்தலாம்.