நடிகை பிரியாமணிக்கு நாளை கல்யாணம் …!!!
நடிகை பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் நாளை (ஆகஸ்ட் 23) பெங்களூருவில் திருமணம் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்யவிருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நடிகை பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. நட்பு காதலாகி நீண்ட காலமாக காதலர்களாக இருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்தை பற்றி சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பிரியாமணி கூறியது ‘நாங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். எனவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்ய இருவருமே தீர்மானித்து உள்ளோம்’ என்றார்.