கியூபாவுடன் : ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்!!
கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் கியூபாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை செயல்படுததுவதற்கா தீர்மானம், பிரான்ஸின் ஸ்டிராஸ்பர்க் நகரிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
இதில், பெரும்பாலான உறுப்பினர்கள் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதற்கு ஒப்புதல் அளித்தனர்.
‘அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஒப்பந்தம், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானது.