நீங்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவரா? அப்ப உஷார்!
வெளியிடங்களில் சாப்பிடுவோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படும். கண்ட இடங்களிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
எந்த ஒரு உடல் உறுப்பிலும் பாதிப்பு என்றால், உடனே அது வெளிப்பட்டுவிடும்.ஆனால், கல்லீரல் அப்படியல்ல அறிகுறிகள் தாமதமாகத்தான் தெரியும். கல்லீரல் பாதிக்கப்படும் நிலையை ஹெபடைட்டிஸ் எனப்படும். அவற்றில் ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன.
நாள் கணக்கில் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவது, மதுப்பழக்கம் போன்றவை கல்லீரலை பாதிக்கும். இதில் மோசமான நிலை என்று சொல்லப்படும் சிரோசிஸ் என்ற நோய் ஏற்பட முக்கிய காரணம் மது அருந்துதல்தான்.
மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.அதே நேரத்தில் சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.