ராஜினாமா செய்தால் தான் உண்மை வெளிவரும் – எடப்பாடியை போட்டு தாக்கிய விஜயதாரணி…!
எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக பதவி விலகினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் உண்மை வெளிவரும் என காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி தெயர்வித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர் 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சை பெற்ற நாட்கள் முழுவதும் சசிகலா தவிர யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலருக்கும் சந்தேகம் எழுந்தது. மேலும் உட்கட்சினரே சந்தேகத்தை மேலும் மேலும் வலுப்படுத்தினர்.
இதனால் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமயில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக பதவி விலகினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் உண்மை வெளிவரும் எனவும் எனவே அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.