இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி :இந்தியா அபார வெற்றி!!!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 43.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 216 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் தவான் ஆடினர். ரோகித் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து கேப்டன் விராட் கோலி தவானுடன் இணைந்தார். தவான் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். கோலி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். இருவரும் சேர்ந்து இலங்கை பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டனர்.
28.5 ஓவரில் இந்திய அணி 220 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. தவான் 90 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். விராட் கோலி 70 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.