என்னாது நமீதாவுக்கு கல்யாணமா?! : ரைசா வெளியிட்ட விடியோ
கோலிவுட்டில் அடுத்து திருமனமாகவுள்ள நடிகை நமிதா.
இவர் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி அடுத்து ஏய், இங்கிலிஸ்காரன், பில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் அதிகமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்த்தவர்.
சமீபத்தில் எந்த படமும் கைவசம் இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸில் கலந்துகொண்டார். இப்போது நடிகர் பரத்துடன் ‘பொட்டு’ எனும் படத்தில் நடித்துகொண்டிருகிறார்.
இந்நிலையில் இவருக்கு வருகிற நவம்பர் 24ஆம் தேதியன்று திருமணமாகவுள்ளதாக நடிகை ரைசா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.