வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Default Image
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்குகடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது.
இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. 
அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் 
கடன்மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார்துறை வங்கிகளில் கடன் பெறலாம்.தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்குஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம்.
சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம்.இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை.இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன. அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கைஅனுப்பப்பட்டு உள்ளது.அதில், ‘அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். ‘இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்