வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்து வெளியற்றம் ..!! தினகரன் அதிரடி!
அதிமுக அம்மா அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கத்தை நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜீ உள்ளிட்டோர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.