புதிய ஒப்பந்தத்தில் ரோமெரோ…!
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் சேர்ஜியோ றொமேரோ, நீண்ட காலத்துக்கான புதிய ஒப்பந்தமொன்றில், தனது கழகத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளார். ஆர்ஜென்டீனா அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கோல் காப்பாளரான றொமேரோ, அடுத்த கோடைகாலத்துடன், ஒப்பந்தம் நிறைவடையும் நிலையை எதிர்நோக்கியிருந்தார். ஆனால், தற்போது அவர், ஆகக்குறைந்தது 2021ஆம் ஆண்டு வரையாவது, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்காக விளையாடவுள்ளார். டேவிட் டீ கியா, ஜோயல் பெரெய்ரா ஆகியோருடன், கழகத்தில் இவர் போட்டிபோட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.