பாலா இயக்கத்தில் துருவ் விக்ரமின் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் சூர்யா- ஜோதிகா மகளுடன் அறிமுகம்….!
பாலா இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் கதாநாயகியாக ஸ்ரேயா சர்மா தேர்வு செய்யபட்டுள்ளார். மேலும் இவருடன் நடிக்க போகும் ஸ்ரேயா சர்மா தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்,சூர்யா,ஜோதிகா போன்ற நட்சத்திர பட்டாளங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சூர்யா ஜோதிகா கணவன் மனைவியாக நடித்த “ஜில்லுனு ஒரு காதல்” படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் நாகர்ஜுனா நடித்த “நிர்மலா கான்வென்ட்” என்னும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்…..