லாலுவுக்கு இனி சலுகைகள் கிடையாது!!
பாட்னா:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள மத்திய அரசு, பாட்னா விமான நிலையத்தில் அவரது கார், தனி வாசல் வழியாக செல்லும் சலுகையை, நேற்று ரத்து செய்தது.பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர், நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். ஆளும் கூட்டணியில், முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் அங்கம் வகிக்கிறது. லாலுவும், அவரது குடும்பத்தினரும், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளனர்.அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாட்னா விமான நிலையத்தில், லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி, ரப்ரி தேவியின் கார், தனி வாசல் வழியாக, நேரடியாக விமான நிலைத்திற்குள் செல்ல வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையை, விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று ரத்து செய்தது.