டிஐஜி ரூபா ‘திடீர்’ பணியிட மாற்றம்!

Default Image
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்

தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலா தற்பொழுது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா மௌட்கில், ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.

அதாவது இதற்காக கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பொழுது சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர். ‘சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக நான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.

இந்த விவகாரத்தில் விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு உடனடி எதிர்வினையாக, இந்த அறிக்கை விவகாரத்தில் ஊடகங்களில் பேட்டியளித்தற்காக விளக்கம் கோரி கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவுக்கு விருந்தினர்களை சந்திக்க என்று தனியாக குளிர்சாதன அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கேமராவில் பதிவாகியிருக்க கூடிய இது தொடர்பான சிசிடிவி பதிவுகள் உடனுக்குடன் அழிக்கப்படுவதாக ரூபா இரண்டாவது அறிக்கையினையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்
தற்பொழுது கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக ‘திடீர்’ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்